பள்ளி மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு!

நாமக்கல் மாவட்டம், மோகனூர்

Update: 2024-01-09 07:31 GMT
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த வாங்கல்- எல்லைமேடு வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நீடித்த நிலைத்த வாழ்வியல் முறைக்கான பயிற்சி கரூர் முதன்மை கல்வி அலுவலர் சுமதி தலைமையில், சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட வன அலுவலர் சரவணன், சுற்றுச்சூழல் தலைமை பொறியாளர் ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர் பயிற்சி பட்டறையில், நாமக்கல் மாவட்ட தேசிய பசுமை படை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ப.ரகுநாத் தலைமையில் அவரது குழுவினர் பாரம்பரிய நெல் கண்காட்சி மற்றும் பனை கைவினைப் பொருட்கள் கண்காட்சி அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் 200 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை மற்றும் காலநிலை மாறுபாடு குறித்த விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது.
Tags:    

Similar News