கீழ்வேளூர் பேரூராட்சிக்கு தென் இந்தியாவின் தூய்மையான நகர் விருது

நாகப்பட்டினம், கீழ்வேளூர் பேரூராட்சிக்கு மத்திய அரசு சார்பில் தென் இந்தியாவின் தூய்மையான நகர் விருது வழங்கப்பட்டுள்ளது.;

Update: 2024-01-13 12:21 GMT

 நாகப்பட்டினம், கீழ்வேளூர் பேரூராட்சிக்கு மத்திய அரசு சார்பில் தென் இந்தியாவின் தூய்மையான நகர் விருது வழங்கப்பட்டுள்ளது.  

நாகப்பட்டினம், கீழ்வேளூர் பேரூராட்சிக்கு மத்திய அரசு சார்பில் தென் இந்தியாவின் தூய்மையான நகர் விருது வழங்கப்பட்டுள்ளது.  

நாகப்பட்டினம் மாவட்டம் - கீழ்வேளூர் பேரூராட சிக்கு ஒன்றிய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் தென்னிந்தியாவின் தூய்மையான நகரம் விருது அளித்துள்ளது. ஸ்வச் சர்வேக்ஷன் 2023 எனும் இந்திய நாடு முழுவதும் நடைபெற்ற நகரங்களுக்கு இடையேயான "தூய்மை நகரங்கள் போட்டி கணக்கெடுப்பு 2023 எட்டாவது ஆண்டு முடிவுகளை புது தில்லியில் பாரத் மண்டபத்தில் கடந்த 11 தேதியன்று நடைபெற்ற விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் வெளியிட்டு வெற்றி பெற்ற நகரங்களை பாராட்டி பேசினார்.

Advertisement

அதில் 15000 மக்கள் தொகைக்கு உட்பட்ட சிறிய நகரங்கள் பிரிவில் நாகப் பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி தென் இந்தியா அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சிக்கு தென் இந்தியாவின் தூய்மையான நகர் விருதினை ஒன்றிய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் மனோஜ் ஜோஷி பேரூராட்சிகள் துறை இயக்குநர் கிரண் குரலா முன்னிலையில் கீழ்வேளூர் பேரூராட்சி மன்றத் தலைவர் இந்திரா காந்தி சேகர், செயல் அலுவலர் குகன் பே ரூராட்சி துணைத் தலைவர். சந்திர சேகரன் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள். கீழ்வேளூர் பேரூராட்சி விருது பெற்றது தொடர்பாக செயல் அலுவலர் குகன் கூறுகையில் : தமிழ்நாடு அரசு அரசு அறிமுக படுத்தி இருந்த நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின் மூலம் பொது மக்களிடம் தூய்மை விழிப்புணர்வு மேற்கொண்டதால் மத்திய அரடின் ஸ்வச் சர்வேக்ஷன் போட்டியில் வெற்றி பெற பெரிதும் உறுதுணையாக அமைந்தது.

தூய்மை நகரங்கள் கணக்கெடுப்பில் முதலாவதாக ஒன்றிய அரசுக்கு பேரூராட்சி அளிக்கும் ஆவண ஆதாரங்கள் சரிபார்க்கப் படுகின்றன. இரண்டாவதாக கணக்கெடுப்பு குழு மூலம் நகரில் ரகசியமாக நேரடிகள ஆய்வு செய்யப் படுகிறது. மூன்றாவதாக மற்றும் மிக முக்கியமாக பொது மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் தான் நகரங்கள் தர வரிசை செய்யப் படுகின்றன.

எனவே இது மக்கள் பிரதிநிதிகள், பொது மக்கள் ஒத்துழைப்புக்கும் பணியாளர்கள் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி என நன்றி தெரிவித்து கொள்வதோடு கீழ்வேளூர் பேரூராட்சியில் கூடுதலான பணியாளர்கள் அமர்த்தப் பட்டு நகர் முழுக்க தூய்மை செய்யப் பட்டதுடன் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரித்தல் , குப்பையில் வரும் தேங்காய் ஒடுகளில் மருந்து தயாரித்தல், பொது மக்கள் குப்பையில் ஆடைகள் வீசி எறியாமல் இருக்க பழைய துணிகளை சேகரித்து அனாதை இல்லங்களுக்கு அனுப்புதல், வீட்டில் உரம் தயாரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாடித் தோட்ட வீட்டுத் தோட்ட போட்டிகள் , கழிவுகளிலிருந்து கலைப் பொருள் தயாரித்தல் குப்பைகளை தரம் பிரித்து விற்பனை செய்து வரும் வருமானத்தில் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுமக்களின் தூய்மை புகார்களை வாட்ஸப் மூலம் பெற்று தீர்த்து வைத்தல் என பல்வேறு முன்னோடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது இவ்வாறு கீழ்வேளூர் பேரூராட்சி செயல் அலுவலர் குகன் தெரிவித்தார்.

Tags:    

Similar News