திறம்பட செயல்பட்ட காவலர்களுக்கு எஸ்பி வாழ்த்து
குற்றவாளிகளுக்கு எஸ்பி எச்சரிக்கை
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை உட்கோட்டம், காளையார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொல்லங்குடி மற்றும் ஆண்டிச்சியூரணி பகுதிகளில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற ஆதாய கொலை வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்த சிவகங்கை உட்கோட்ட தனிப்படையினர், அவர்களை கைது செய்ததுடன் நகைகளையும் மீட்டெடுத்தனர்.
மேலும், சிவகங்கை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லணி பகுதிகளில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து, நகைகளை மீட்டெடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படையினர் மற்றும் சிவகங்கை நகர் காவல் நிலைய எல்லை பகுதிகளில் அபாயகரமான ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த நபர்களை கைது செய்து, எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுத்த சிவகங்கை நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அணியினர் மற்றும் பூவந்தி, மானாமதுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து, அவர்களிடமிருந்து (8+3+2) 13கிலோ கஞ்சா கைப்பற்றிய மானாமதுரை உட்கோட்ட தனிப்படையினர், பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய நீண்ட நாட்களாக கைது செய்யப்படாமல் இருந்த ரவுடிகள் மற்றும் அரசு பேருந்தில் கொள்ளையடித்துச் சென்ற குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கைது செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படையினர் மற்றும் திருவேகம்பத்தூர் காவல் நிலைய எல்லை பகுதிகளில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தவர்களை கண்டுபிடித்து, அவர்களை கைது செய்து, 42கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கைப்பற்றிய தேவகோட்டை உட்கோட்ட தனிப்படையினர் மற்றும் காரைக்குடி பகுதியில் திருடப்பட்ட இருசக்கர வாகனங்களை மீட்டெடுத்து, குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கைது செய்த காரைக்குடி உட்கோட்ட தனிப்படையினர் மற்றும் திருப்பத்தூர் உட்கோட்டத்தில் ஆறு-க்கும் மேற்பட்ட Woman Missing வழக்குகளில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்த திருப்பத்தூர் உட்கோட்ட தனிப்படையினர் மற்றும் இளையான்குடி காவல் நிலைய POCSO வழக்கில் சிறப்பாக செயல்பட்டு நீதிமன்றத்தில் சாட்சிகளை ஏற்றி, எதிரிக்கு ஆயுள் தண்டனை வாங்கி கொடுத்த இளையாங்குடி காவல் ஆய்வாளர் மற்றும் அணியினர் உள்ளிட்ட சிறப்பாக செயல்பட்ட சிவகங்கை மாவட்டத்தின் காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்கள் ஆகிய 70 நபர்களை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்விந்த் பாராட்டு சான்றிதழ் வழங்கி, பண வெகுமதி வழங்கவும் சிபாரிசு செய்துள்ளார்.
மேலும் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு, அவர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.