நாகையில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் முகாம்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை கூட்டரங்கில் திருநங்கைகளுக்கான  சிறப்பு குறைத்தீர்க்கும் முகாம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது

Update: 2024-06-21 14:25 GMT

சிறப்பு முகாமில் கலந்து கொண்டுள்ளார் 

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருநங்கைகளுக்கான  சிறப்பு குறைத்தீர்க்கும் முகாம் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி அவர்கள் தலைமையில்,நடைபெற்றது  .

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருநங்கைகளுக்கான  சிறப்பு குறைத்தீர்க்கும் முகாம் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி ரா.பேபி அவர்கள் தலைமையில் இன்று(21.06.2024) நடைபெற்றது. திருநங்கைகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில்,

திருநங்கைகளுக்கான நலவாரியம் அட்டை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 45 திருநங்கைகள் கலந்துகொண்டனர். சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிட ஏதுவாக சம்பந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைந்து அதன் மூலம் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றினை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மாவட்ட சமூகநல அலுவலர் .திவ்யபிரபா, மகளிர் திட்டம் அலுவலர் மகளிர் திட்டம் .இந்திராணி, மாவட்ட தாட்கோ மேலாளர் சக்திவேல் கலியபெருமாள் , மாவட்ட கொல்ல நோய் மருத்துவர் லியாகத்தலி, திருநங்கைகளின் தலைவி வெண்ணிலா ஆகியோர் கலந்துகொண்டனர்

Tags:    

Similar News