கல்வடங்கம் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷக பூஜை

ஐப்பசி வெள்ளிக்கிழமையையொட்டி கல்வடங்கம் அங்காளம்மன் கோவிலில் சிறப்பு அபிஷக பூஜைகள் நடைபெற்றது.

Update: 2023-10-21 03:20 GMT

கல்வடங்கம் அங்காளம்மன்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அங்காளம்மன் கோவிலில் ஐப்பசி வெள்ளிக்கிழமையையொட்டி அதிகாலை முதலே அருள்மிகு அங்காளம்மன் சுவாமிக்கு பால், தயிர்,சந்தனம்,திருமஞ்சனம், குங்குமம்,பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு அங்காளம்மன் சுவாமியை வழிபட்டு சென்றனர்.



Tags:    

Similar News