கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

வி.பி., அகரம் ஊராட்சியில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2023-12-23 03:19 GMT

வி.பி., அகரம் ஊராட்சியில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. 

வி.பி., அகரம் ஊராட்சியில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நடந்த முகாமிற்கு, ஒன்றிய துணைச் சேர்மன் அன்பு மணிமாறன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். முகாமில் கால்நடை உதவி மருத்துவர் ஜெயகாந்தி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் சத்தியவாணி ஆகியோர் கால்நடைகளை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். 850 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், செயற்கை முறையில் கருவூட்டல், பொது சிகிச்சை, ஆண்மை நீக்கம், சினை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து சிறந்த முறையில் கால்நடைகளை பராமரித்த, அதன் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
Tags:    

Similar News