பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த தேர் திருவிழா

பத்து ஆண்டுகளுக்கு பிறகு மாரியம்மன் கோயில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

Update: 2024-05-28 12:15 GMT

தேர் திருவிழா

.பெரம்பலூர் நகர் சங்கு பகுதியில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவில் திருவிழா கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு கடந்த மே 19ஆம் தேதி பூச்சொறிதல் விழாவுடன் தொடங்கி நடைபெற்றது.

இதனை அடுத்து மே 21 ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில், நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர் அதனை தொடர்ந்து தீச்சட்டி ஏந்தி அழகு குத்தியும் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் மே 28ஆம் தேதி இன்று காலை 11 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது, இதில் பல்வேறு அபிஷேகத்திற்கு பிறகு அலங்காரம் செய்யப்பட்ட அம்மன் திருத்தேரில் எழுந்தருளி, பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இத்தேரை திரளான பொதுமக்கள், பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் கரகம், செண்டை மேளம், மாரிஅம்மன் முருகன், விநாயகர், போன்று சாமி உருவங்கள் வேடமிட்டு நடன கலை நிகழ்ச்சியுடன் இந்த தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக் குழுவினர், மற்றும் கோவில் குடிபாட்டு மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags:    

Similar News