மணத்தி கிராம மக்களுக்கு ஸ்ரீ பரமகுரு இராமானுஜ ஜீயர் உதவி
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ பரமகுரு இராமானுஜ ஜீயர் கனமழையினால் பாதிக்கப்பட்ட மணத்தி கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், திருநெல்வேலி- திருச்செந்தூர் மெயின்ரோட்டில் தென் திருப்பேரை அருகிலுள்ள கிராமம் மணத்தி. இக்கிராமம் டிச.17 ஆம் தேதி நடந்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அக்கிராமமே தண்ணீரில் மூழ்கியது. இக்கிராம மக்களை படகு மூலம் மீட்டு நாலுமாவடி தேவனுடைய கூடாரத்தில் அதனுடைய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் மணத்தி கிராமத்தில் தண்ணீர் வற்றும் வரைக்கும் அங்கேயே தங்க வைத்து அடைக்கலம் கொடுத்தார். மணத்தி கிராமம் இன்று வரையிலும் இயல்பு நிலைக்கு திரும்பாமல் அங்குள்ள மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
இதனைக் கேள்விப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில் ஸ்ரீஸ்ரீஸ்ரீபரமகுரு இராமானுஜ ஜீயர் ஒரு குடும்பத் திற்கு தேவையான அரிசி பலசரக்கு சாமான்கள், காய்கறிகள், போர்வை, வேஷ்டி, சேலை ஆகியவற்றை மனத்தி கிராமத்தில் உள்ள 100 குடும்பங்களுக்கு வழங்கினார். சித்தா டாக்டர் ராஜீவ்காந்தி, சிவகாசி தொழில் அதிபர் பிரபாகர், அர்ஜூனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.