நான் நீ.போட்டியால் குப்பை மேடாகும் உசிலம்பட்டி சந்தை

உசிலம்பட்டி சந்தையில் சேரும் குப்பைக்கழிவுகள் அள்ளப்படாததால் ஏற்ப்படும் துர்நாற்றத்தால் சந்தைக்கு வரும் மக்களுக்கு தொற்று நோய் ஏற்ப்படும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது.

Update: 2023-10-27 08:37 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ளது உசிலம்பட்டி சந்தைத்திடல்.இங்கு வாரச்சந்தை தினசரி சந்தை காய்கறி சந்தை பூ சந்தை உள்ளிட்டவைகள் செயல்பட்டு வருகின்றன.இங்கு அதிகாலை முதல் நள்ளிரவு வரை உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.பூ சந்தை மற்றும் காய்கறி சந்தையில் வீணாகும் கழிவுகளை சந்தைப்பகுதியில் ஓரு பகுதியில் கொட்டி வைக்கின்றனர் வியாபாரிகள்.இவ்வாறு தினமும் டன் கணக்கில் குப்பைக்கழிவுகள் சேருகின்றன. உசிலம்பட்டி சந்தை நகராட்சி எல்லைக்குள் இருந்தாலும் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டுக்குள் இருப்பதினால் ஊராட்சி ஒன்றியமே நிர்வகிக்கிறது.இதனால் உசிலம்பட்டி நகர்பகுதி முழுவதும் குப்பைகளை அள்ளும் நகராட்சி ஊழியர்கள் சந்தைக்குள் சேரும் குப்பை கழிவுகளை அள்ளுவதில்லை.கேட்டால் ஊராட்சி ஒன்றியம் வசம் இருப்பதால் அள்ளுவதில்லை எனக்கூறுகின்றனர்.ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டால் நாங்கள் சந்தை வரவு செலவு மட்டுமே பார்ப்போம்.குப்பை அள்ளுவது எங்கள் வேலையில்லை எனப் பதிலளிக்கின்றனர்.இதனால் சந்தையில் சேரும் குப்பைகழிவுகளை என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர் வியாபாரிகள்.மேலும் சேரும் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்ப்படுகின்றது.இதனால் சந்தைக்கு வரும் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்ப்படும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது. நகராட்சியோ ஊராட்சியோ இரண்டுமே தமிழக அரசு இயந்திரத்தின் கீழ் செயல்படுவைதான்.எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு சுகாதாரச் சீர்கேட்டை ஏற்ப்படுத்தும் சந்தைக் குப்பை கழிவுகளை தினமும் அகற்ற வேண்டுமென்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Tags:    

Similar News