மன அழுத்த பயிற்சி முகாம்
திண்டுக்கல் வட்டார போக்குவரத்து கழகம் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி வாகன ஓட்டுனர்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு மற்றும் மன அழுத்த பயிற்சி நடைபெற்றது.
Update: 2023-12-06 12:07 GMT
திண்டுக்கல்லில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வட்டார போக்குவரத்து கழகம் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி வாகன ஓட்டுனர்களுக்கு பி எஸ் என் ஏ பொறியியல் கல்லூரியில் ஒரு நாள் விழிப்புணர்வு மற்றும் மன அழுத்த பயிற்சி நடைபெற்றது. மன அழுத்த பயிற்சிக்கு திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுரேஷ் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வாகன ஓட்டுனர்களுக்கு திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த தங்கராஜ் 200க்கும் மேற்பட்ட ஓட்டுனர்களுக்கு மன அழுத்த பயிற்சி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.