குண்டடத்தில் மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

குண்டடம் பஸ் நிறுத்தத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மேட்டுக்கடை வி.எஸ். வி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2024-03-22 07:45 GMT

விழிப்புணர் பேரணி 

திருப்பூர் மாட்டம் குண்டடம் பஸ் நிறுத்தத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மேட்டுக்கடை வி.எஸ்.வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை தாராபுரம் ஆர்டிஓ செந்தில் அரசன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி முன்னிலை வகித்தார். தாராபுரம் மண்டல துணை தாசில்தார் சுந்தரமூர்த்தி, குண்டடம் நில வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் மூர்த்தி, உதவி ஆய்வாளர் நாகராஜன், பேரூராட்சி செயலாளர்கள் பிரேமலதா ஆகியோர் வாக்குகளின் முக்கியத்துவத்தையும், வாக்களிப்பதின் அவசியத்தையும், 18 வயது பூர்த்தி அடைந்த அனைவருக்கும் வாக்களிக்க வேண்டும் என்பதையும் வாக்காளர்களின் உறுதி மொழியில் வலியுறுத்தினார். குண்டடம் பஸ் நிறுத்தத்தில் தொடங்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு பேரணி ,காவல் நிலைய சாலை, கோவை சாலை, குண்டடம் வாரச்சந்தை உள்ளிட்ட முக்கிய வீதியின் வழியாக வந்து ருத்ரவரி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நிறைவு பெற்றது
Tags:    

Similar News