கீரிப்பட்டியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்கள் போராட்டம்

உசிலம்பட்டி அருகே ஆசிரியர்கள் பற்றாக்குறையால் வகுப்புகளை புறக்கணித்து மாணவ மாணவிகள் பெற்றோர்களுடன் பள்ளி முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-12-20 02:16 GMT

கீரிப்பட்டியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்கள் போராட்டம்

 மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது கீரிப்பட்டி.இங்குள்ள அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் சுமார் 200க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில் கணித ஆசிரியர் மற்றும் ஆங்கில ஆசிரியர் கடந்த இரண்டு வருடங்களாக காலியாக உள்ளது.இதுவரை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.இது குறித்து அரசிடம் பலமுறை மனுக் கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப மறுத்து பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பள்ளியை புறக்கணித்து பள்ளி முன் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் உடனடியாக ஆசிரியரை நியமிக்க வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.இதனால் பள்ளியில் மாணவ மாணவிகளின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றது.மேலும் ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி பள்ளி முன் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. கல்வி அலுவலர் (பொறுப்பு) ஜகவர் பெற்றோர்களோடும் மாணவ மாணவிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி ஆசிரியர்கள் நியமிப்பதாக உறுதியளித்தை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் பள்ளிக்குச் சென்றனர்
Tags:    

Similar News