மலைகோட்டையின் 900 அடி உயரத்தில் யோகா செய்த மாணவர்கள்

திண்டுக்கல் மலைக்கோட்டையின் மேல் 900 அடி உயரத்தில் மாணவர்கள் யோகாசனம் செய்தனர்.

Update: 2024-06-22 10:36 GMT

900 அடியில் யோகா செய்த மாணவர்கள

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 900 அடி உயரத்தில் திண்டுக்கல் மலைக்கோட்டையில் மேல் யோகாசனம் செய்த மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. உலகம் முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

அதன்படி இந்திய தொல்லியல் துறை சார்பில், திண்டுக்கல் மலைக்கோட்டையின் மேல் யோகாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. கடல் மட்டத்திலிருந்து 900 அடி உயரத்தில் மாணவர்கள் யோகாசனத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மலைக்கோட்டையில் எப்போதும் காற்று பலமாக வீசும். மேலும் மலைக்கோட்டையில் பழங்கால பிரங்கிகள் திப்பு சுல்தான் பயன்படுத்திய ஆயுதங்கள் பதுங்கு குழிகள், சிறை குழிகள் ஏராளமாக உள்ளன.

வரலாற்று பொக்கிஷமாகவும் விளங்குகிறது. இதில் மாணவர்கள் நிகழ்த்திய வரலாற்று சாதனை பலரையும் பேச வைக்கிறது.

Tags:    

Similar News