அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
Update: 2024-01-24 09:53 GMT
தமிழக அரசின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு கிராமங்களில் மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளது. அதன் காரணமாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2023-24 ல் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் மேற்கொள்ளபட வேண்டிய பணிகள் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி, மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.