பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குநர் பொன்னையா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2024-05-04 04:10 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குநர் பொன்னையா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரவ வளர்ச்சி துறை மூலம் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குநர் பொன்னையா, மாவட்ட ஆட்சியர் கற்பகம் முன்னிலையில் பார்வையிட்டு. ஆய்வு செய்தார், இதில் பெரம்பலூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மற்றும் கவுள்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கான குடியிருப்புகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குநர் பார்வையிட்டு. ஆய்வு செய்தார். தொடர்ந்து, கவுள்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இலங்கை தமிழ்ர்கள் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்கும் வகையில் ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் வெட்டப்பட்டு வரும் குடிநீர் கிணற்றையும் மேலும், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அயன் பேரையூர் அருகில் உள்ள வெள்ளாற்றில் அமைக்கப்பட்டு வரும் மூன்று நீர் உறிஞ்சி கிணறுகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லலிதா, செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநர் வீரமலை, உதவி திட்ட அலுவலர்கள் கிருஷ்ணன், ஆறுமுகம், முருகன், உதவி செயற்பொறியாளர்கள் லதா, ஜெகன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News