அரசு பழங்குடியின பள்ளி, விடுதிகளுக்கு உபகரணங்கள் - ஆட்சியர் வழங்கல்

அரசு பழங்குடியின பள்ளி, விடுதிகளுக்கு உபகரணங்கள் ஆட்சியர் ச.உமா வழங்கினார்.

Update: 2023-12-04 11:16 GMT

அரசு பழங்குடியின பள்ளி, விடுதிகளுக்கு உபகரணங்கள் ஆட்சியர் ச.உமா வழங்கினார்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கொல்லிமலையில் செயல்பட்டு வரும் 10 அரசு பழங்குடியினர் நலப்பள்ளி மற்றும் விடுதிகளுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் இந்தியா சியாட்டில் குழு, இணைந்து வழங்கிய ரூ.3 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா வழங்கினார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கல்விப் பணியுடன் சமூகப் பணியையும் இன்றியமையாததாக கருதி தொடர்ந்து செயலாற்றி வருகிறது மலைவாழ் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் இதர உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. சென்ற ஐந்தாண்டுகளில் அறிவியல் தொழில்நுட்பத்தின் வழி அருகாமை வளர்ச்சி (Neighbourhood Empowerment through Science and Technology (NEST)) என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வந்த அண்ணாமலை பல்கலைக்கழகம் இனிவரும் ஐந்தாண்டுகளுக்கு அறிவியல் தொழில்நுட்பத்தின் மூலம் பழங்குடியினர் வளர்ச்சி (Tribal Empowerment through Science and Technology (TEST)) என்று விரிவாக்கம் பெற்றிருக்கிறது. இந்தியா சியாட்டில் குழு, அமெரிக்கா, இது போன்ற திட்டங்களுக்கு பல்கலைக்கழகத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து, அதன் மூலம் மலைவாழ் பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதைப் குறிக்கோளாக கொண்டிருக்கிறது.

திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியா சியாட்டில் குழு, உதவியுடன் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் இந்தியா சியாட்டில் குழு, அமெரிக்கா நிறுவனம் இணைந்து கொல்லிமலையில் செயல்பட்டு வரும் 10 அரசு பழங்குடியினர் நலப்பள்ளி மற்றும் விடுதி, கொல்லிமலை, மேலூர் அரசு பழங்குடியினர் பள்ளி, செங்கரை அரசு பழங்குடியினர் பெண்கள் விடுதி, முள்ளுக்குறிச்சி அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றுக்கு ரூ. 3 லட்சம் மதிப்பில் உபகரணங்களை வழங்கியுள்ளது.

Tags:    

Similar News