திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொளத்தூர் மணி

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-22 08:58 GMT

கொளத்தூர் மணி

திராவிடர் விடுதலை கழக செயலவை கூட்டத்திற்கு அதன் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் ஈரோட்டில் நடைபெற்றது.பின்னர் செய்தியாளர்களை சந்திந்த அதன் தலைவர் ,

பெரியாரிய சிந்தனைகளை தமிழ்நாட்டில் செயல்படுத்திக் கொண்டிருக்கும் திமுகவின் தலைமையிலான கூட்டணியை ஆதரிப்பது என முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார். அதே நேரத்தில், சாதிய கட்சிகள் என்ற பெயரில் தங்களின் சுயநலத்துக்காக சாதிய வன்முறையை தூண்டி,

ஆணவ கொலைக்கு ஆதரவாக கோவில் நுழைவு போராட்டத்தை இழி சொற்களால் விமர்சித்தும் பேசிய சூரியமூர்த்தி என்பவரை திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளராக அறிவித்துள்ளது. இந்த வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று செயலக சார்பாக வேண்டுகோள் வைப்பதாகவும் ,

வேட்பாளரை மாற்றா விட்டால் திராவிடர் விடுதலை கழகம் மற்றும் அதன் ஆதரவாளர்கள் அந்த வேட்பாளரை புறக்கணிப்பது என்றும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News