நாமக்கல் தொகுதி கொமக வேட்பாளராக சூரியமூர்த்தி தேர்வு
நாமக்கல் தொகுதி கொமக வேட்பாளராக சூரியமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.;
கொமக வேட்பாளர் தேர்வு
திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இத்தொகுதியில் கொங்குநாடு மக்கள் கட்சியை சேர்ந்த சின்ராஜ் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள நிலையில் மீண்டும் கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனு பெற்று நேர்காணல் நடத்திய நிலையில் ஈரோட்டில் அக்கட்சியின் ஆட்சி மன்ற குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி நாமக்கல் தொகுதியில் வேட்பாளராக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளராக போட்டியிட உள்ளார் இவர் கடந்த 2001 , 2016 ஆகிய ஆண்டுகளில் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கும் 2006 ஆம் ஆண்டு வெள்ளகோவில் சட்டமன்ற தொகுதிக்கும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளராக இருந்தவர் கட்சி அறிவித்த அனைத்து போராட்டங்கள் கலந்து கொண்டு சிறைச்சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.