மேலப்பாளையத்தில் பரபரப்பு ஏற்படுத்திய தமிழக ஜனநாயக கட்சி
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தில் கமலஹாசனின் உருவபொம்மையை தமிழக ஜனநாயக கட்சியினர் எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.;
Update: 2024-02-22 01:19 GMT
உருவ பொம்மை எரிக்க முயற்சி
நடிகர் கமலஹாசனின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் காட்சி இருப்பதாகவும் எனவே அப்படத்தை தடைசெய்யக்கோரியும், கமல்ஹாசனை இந்தியா கூட்டணியில் இணைத்து கொள்ள கூடாது என வலியுறுத்தியும் நெல்லை மேலப்பாளையத்தில் நேற்று தமிழக ஜனநாயக கட்சி சார்பில் கமலஹாசனின் உருவ பொம்மையை எரிக்க முயற்சித்தனர். இதனால் மேலப்பாளையத்தில் பரபரப்பு நிலவியது.