நாகப்பட்டினம் மாவட்டத்தில் பயிர்கடன் ரூ.200.00 கோடி வழங்க இலக்கு

நாகப்பட்டினம் மாவட்டம் கூட்டுறவுத்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர்கடன் வழங்க ரூ.200.00 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-28 13:57 GMT

மாவட்ட  ஆட்சியர்

நாகப்பட்டினம் மாவட்டம் கூட்டுறவுத்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர்கடன் வழங்க ரூ.200.00 கோடி இலக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் .ஜானி டாம் வர்கீஸ், தகவல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் பயிர்கடன் வழங்க இந்த ஆண்டு ரூ.200.00 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே கடன் தேவைப்படும் விவசாயிகள் தாங்கள் உறுப்பினராக உள்ள சங்கத்தில் கடன் மனு அளித்து, கடன் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயிர்கடன் தனிநபர் ரூ.1.60 இலட்சம் வரையில் நபர் ஜாமீன் பேரிலும்,

அடமானத்தின் பேரில் ரூ.3.00 இலட்சம் வரையிலும் கடன் பெறலாம். ஏக்கர் ஒன்றுக்கு பயிர்கடன் ரொக்கமாக ரூ.28950/- ம் பொருள் பகுதியாக ரூ.7550/- ம் ஆக மொத்தம் ரூ.36500/- வழங்கப்படும். மேலும் பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

எனவே சாகுபடி செய்யும் தகுதி உடைய அனைத்து விவசாய உறுப்பினர்களுக்கும் கூட்டுறவுத்துறை மூலம் பயிர்கடன் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், உறுப்பினர் படிவத்தை பெற்று ரூ.110 பங்கு தொகை மற்றும் நுழைவுக்கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேர்ந்து உரிய ஆவணங்களுடன் கடன் மனுவை சமர்ப்பித்து அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயனடையலாம்.

இதில் ஏதாவது சேவை குறைபாடுகள் இருந்தால் நாகப்பட்டினம் மண்டல இணைப்பதிவாளரை 7338721201 -என்ற எண்ணிற்கும். நாகப்பட்டினம் சரக துணைப்பதிவாளரை 9087946937 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்

Tags:    

Similar News