தடை செய்யப்பட்ட பொருள் டீக்கடையில் விற்பனை

தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்த டீ கடைக்காரரை போலீசார் கைது செயதனர்.

Update: 2024-05-15 12:17 GMT

கோப்பு படம்

கரூர் மாநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மே 14 ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் கரூர் நகரப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது கருப்பாயி கோவில் தெருவில் டீக்கடை நடத்தி வரும் கரூர் வ உ சி தெருவை சேர்ந்த செல்வராஜ் வயது 40 என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

கடையில் மேற்கொண்ட சோதனையில், ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள, விற்பனைக்கு வைத்திருந்த 20 பாக்கெட் ஹான்ஸ் புகையிலை பொருட்கள் இருந்ததை பறிமுதல் செய்தனர். பின்னர் செல்வராஜை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, பின்னர் காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags:    

Similar News