மரத்தில் மோதி விநாயகர் சிலை தலை சேதம்
குமாரபாளையத்தில் ஊர்வலமாக செல்லும் போது மரத்தில் மோதி விநாயகர் சிலையின் தலை சேதமானது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஊர்வலமாக செல்லும் போது மரத்தில் மோதி விநாயகர் சிலையின் தலை சேதமானது.விநாயகர் சதுர்த்தியையொட்டி பெரிய அளவிலான சிலைகள் வைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த சிலைகள் ஒரு நாள், மூன்று நாட்கள், ஐந்து நாட்கள் எனும் வகையில் வழிபாடு செய்யப்பட்டு காவிரி ஆற்றில் விட்டு வருவது வழக்கம். நேற்று பல இடங்களில் வைத்த சிலைகள், பல ஊர்களிலிருந்து கொண்டு வரப்பட்ட சிலைகள் ஆகியவை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. அப்போது ஒரு விநாயகர் சிலையில் தலைப்பகுதி, வழியில் உள்ள ஒரு மரத்தின் மீது மோதியதில் தலை பலத்த சேதமானது. காளியம்மன் கோவில் தேரோட்டம் நடக்கும் முன்பு, தேர் செல்லும் சாலைகள் யாவும் பராமரிக்கப் படுகின்றன. அதுபோல் நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் காவிரி ஆற்றில் விடுவதற்காக பல ஊர்களிலிருந்து கொண்டு வரப்படும் நிலையில், வழியில் ஏதேனும் இடையூறுகள் உள்ளனவா? என்பது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.