எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவராக மேலப்பாளையத்தை சேர்ந்த நெல்லை முபாரக் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து நேற்று(நவம்பர் 15) விமன் இந்தியா மூவ்மெண்ட் நெல்லை மாநகர மாவட்ட ஒருங்கிணைப்பாளர் யாஸ்மின் ஆரிப் தலைமையில் நிர்வாகிகள் நெல்லை முபாரக்கை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்வின்போது எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.