நெல்லை மாநகர மானூர் அருகே உள்ள எட்டாம் குளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் என்ற முருகேசன்(28). இவர் ஒரு பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். கடந்த 16ஆம் தேதி அந்த பெண் அங்குள்ள தெரு வழியாக நடந்து சென்றபோது முருகன் திடீரென அந்த பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து நேற்று முருகனை கைது செய்தனர்.