ஆபத்தான சாலை குறித்து ஆட்சியரிடம் மனு

எஸ்டிபிஐ கட்சியினர்

Update: 2024-11-26 05:25 GMT
நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் நேற்று எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை தொகுதி சார்பாக மனு அளிக்கப்பட்டது.இந்த நிகழ்வுக்கு ஜங்ஷன் கிளை தலைவர் முகமது உசேன் தலைமை தாங்கினார். இதில் ஜங்ஷனில் இருந்து சங்கர் நகர் வரை உள்ள சாலைகள் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது. இதனால் ஆம்புலன்ஸ் அவசரமாக செல்ல முடியவில்லை என தெரிவித்திருந்தனர். இந்த நிகழ்வின் பொழுது தொகுதி தலைவர் ஷேக் இஸ்மாயில், செயலாளர் பயாஸ், ரஹ்மத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News