அரசுப் பேருந்து மோதியதில் ஆசிரியை பலி
திண்டுக்கல்லில் அரசு பேருந்து மோதி ஆசிரியை பலியான சம்பவன் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-01-31 05:28 GMT
திண்டுக்கல், பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து மோதியதில் ஆசிரியை ஒருவா் சம்பவ இடத்திலேயே திங்கள்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் வட்ட சாலைப் பகுதியைச் சேர்ந்தவா் காா்த்திக் மனைவி மீரா (35). தனியாா் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய இவா் வெளியூா் செல்வதற்காக திண்டுக்கல் பேருந்து நிலையத்துக்கு வந்தாா்.
அப்போது, திண்டுக்கல்லில் இருந்து வடமதுரைக்கு புறப்பட்ட நகரப் பேருந்து, மீரா மீது மோதியது.இதில் பலத்த காயமடைந்த இவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து ஏற்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.