செல்போன் திருடிய வாலிபர் கைது

சேலத்தில் செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-01-06 02:29 GMT

பைல் படம்

சேலம் ஜாகீர் காமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் லாவண்யா (வயது 23), ஓமலூர் செங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் வளர்மதி (31). இவர்கள் இருவரும் கட்டிட வேலை செய்து வந்தனர். அப்போது இவர்களது செல்போன்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர், இதுகுறித்து சூரமங்கலம் போலீசில் இருவரும் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்., விசாரணையில் செல்போன்களை திருடியது கந்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த கணேசன் (27) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News