வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Update: 2023-12-15 07:21 GMT

இளைஞர் தற்கொலை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் மோகன்.இவரது மகன் சங்கீத்குமார் (வயது 24). கூலித்தொழிலாளி.இவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சங்கீத்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.இதுகுறித்து இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து வாலிபர் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News