பஸ் மோதி வாலிபர் உயிரிழப்பு
Update: 2023-12-19 01:24 GMT
உயிரிழப்பு
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் சன்னிதி தெருவில், ஆந்திரா பதிவு எண் கொண்ட சுற்றுலா பேருந்து நிறுத்தப்பட்டு இருந்தது. நேற்று மதியம் 1:00 மணி அளவில், ஆந்திராவைச் சேர்ந்த ராஜேஷ், 45. என்பவர் பேருந்தை எடுக்க முயன்றார். அப்போது, காஞ்சிபுரம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த அண்ணாமலை, 31, மீது மோதியது. இதில், அண்ணாமலை சம்பவ இடத்திலேயே இறந்தார். சிவகாஞ்சி போலீசார், அண்ணாமலை உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.