தஞ்சை ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணியில் முறைகேடு? - வெள்ளை அறிக்கை கோரும் அமமுக..!

தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நடைபெற்ற பணிகள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தி மாநகராட்சி ஆணையரிடம் அமமுகவினர் மனு அளித்தனர்.

Update: 2023-10-28 05:24 GMT

தஞ்சை மாநகராட்சி ஆணையரிடம் அமமுகவினர் மனு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஆர்.மகேஸ்வரியிடம், அமமுக மாநிலத் துணை பொதுச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான எம்.ரெங்கசாமி தலைமையில் மாநகர மாவட்டச் செயலாளர் ராஜேஸ்வரன், மாமன்ற உறுப்பினர் கண்ணுக்கிணியாள் ஆகியோரது முன்னிலையில் அமமுகவினர் மனு ஒன்றை அளித்தனர். அதில், தஞ்சாவூர் மாநகராட்சியில் விடுபட்ட சந்துகளுக்கு புதை சாக்கடை திட்டத்தை அமல்படுத்தவேண்டும்.  சீனிவாசபுரம் அருகில் உள்ள குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். குப்பை கிடங்கில் நடைபெற்ற பணிகளில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளதாக தகவல் தெரிகிறது. உடனடியாக ஆய்வு செய்து விசாரனை நடத்த ஆணையிட வேண்டும். தஞ்சாவூர் கீழஅலங்கம் பகுதியில் உள்ள பழைய மீன் மார்க்கெட்டை உடனடியாக மாற்ற வேண்டும். சிவகங்கை பூங்காவை உடனடியாக மக்கள் பயன் பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளில் அதிகளவு முறைகேடுகள் நடந்தி நடந்திருப்பதாகவும். முறையாக திட்டமிடாமல் தேவையற்ற வகையில் செலவு செய்ததாக மக்கள் மத்தியில் கருத்து  நிலவுகிறது. இதனால் மாநகராட்சி உடனடியாக ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தஞ்சாவூரில் உள்ள அனைத்து வார்டுகளில் உள்ள சந்துகளில் பேவர் பிளாக் டைல்ஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை உடனடியாக நிறுத்தி சிமெண்ட் சாலை மட்டுமே அமைக்கவேண்டும். பழைய பேருந்துநிலையத்தையும் அரசு விரைவு பேருந்து நிலையத்தையும் ஒன்றாக இணைத்து அங்கு செயல்படுகின்ற அரசு விரைவு போக்குவரத்து பணிமனையை புதிய பேருந்து நிலையத்துக்கு மாற்ற வேண்டும். மழைநீர் வடிகால் நடைபெற்ற பகுதியில் முறையாக வடிகால் அமைக்காததால் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முறையற்ற முறையில் நடந்த வடிகால் பணிகளை ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்கு வேண்டும்.  மாரிகுளம் பம்பிங் ஸ்டேஷனுக்கு கூடுதலாக 110 ஹெச்பி திறன் கொண்ட மின் மோட்டார் டிரான்ஸ்பார்மர் மற்றும் கூடுதல் குழாய் பொருத்தி புதை சாக்கடை பிரச்சனையை சரிசெய்து கொடுத்திட வேண்டும். அனைத்து பகுதிகளிலும் எல்.இ.டி மின் விளக்குகள் பொருத்தி தர வேண்டும். மாநகரில் பழைய குடிநீர் குழாயை மாற்றி அமைத்திடவும் குடிநீர் குழாயை மாதம் ஒருமுறை ப்ளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என கோரியிருந்தனர்.  மனுவைப் பெற்றுக்கொண்ட மாநராட்சி ஆணையர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 
Tags:    

Similar News