இளம் பெண்ணின் தலையில் கல்லை  போட்டுக் கொலை செய்த மாஜி காதலன் கைது

கொலை வழக்கில் தப்பி ஓடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-02-26 14:47 GMT

காதலியை கொலை செய்த காதலன்

தஞ்சாவூர் மாவட்டம்  பேராவூரணியில் இளம்பெண்னின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு தப்பியோடிய மாஜி காதலனை போலீசார் கைது செய்தனர்.

பேராவூரணி பேரூராட்சி பொன்னாங்கண்ணிக்காடு ஆனந்தவல்லி வாய்க்கால் தென்கரை  பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் ( 51),  கோவிந்தம்மாள் ( 40) தம்பதியினர். இவர்களது மகள்  சிவஜோதிக்கும், ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புனல்வாசல் பகுதியை சேர்ந்த, பேராவூரணி அரசு மருத்துவமனை வளாகத்தில் தனியார் ஆம்புலன்ஸ்சில் ஓட்டுனராகவும், லாரி ஓட்டுநராகவும்  வேலை பார்த்த காளீஸ்வரனும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் கடந்த  ஓராண்டுக்கு முன் பேராவூரணியை விட்டு காளீஸ்வரன் சொந்த ஊருக்கு  சென்றுவிட்டார். 

காளீஸ்வரனும் சிவஜோதியும் செல்போன்  மூலம் அடிக்கடி பேசி வந்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காளீஸ்வரனுக்கு சொந்த ஊரில் பெற்றோர் வேறு பெண்னை பார்த்து திருமணம்  செய்து வைத்துள்ளனர்.  இந்நிலையில் கடந்த 21 ஆம்தேதி  இரவு   குடிபோதையில் வந்த  காளீஸ்வரன் திருமணம் செய்த மனைவியை பிடிக்கவில்லை  தன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறு சிவஜோதியை வற்புறுத்தியுள்ளார்.

திருமணம் ஆன உன்னுடன் வரமாட்டேன் என சிவஜோதி மறுப்பு தெரிவித்துள்ளார்.  சிவஜோதியின் பெற்றோர்கள் பேராவூரணி போலீசாருக்கு தகவல் தெரிவித்து  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காளீஸ்வரன் போதையில் இருந்த காரணத்தால் காவல் நிலையம் அழைத்து செல்லாமல்  கண்டித்து அனுப்பியுள்ளனர். இந்நிலையில்  அதிகாலை  திரும்பவும் வீட்டின் கதவை தட்டி உள்ளே நுழைந்த காளீஸ்வரன் சிவஜோதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன்,  வீட்டு கதவின் பின்புறம் இருந்த முண்டுக்கல்லை எடுத்து சிவ ஜோதி தலையில் காளீஸ்வரன் போட்டதில்  சம்பவ இடத்திலேயே  சிவஜோதி துடிதுடித்து  இறந்தார்.

அதன்பின்னர், காளீஸ்வரன் தப்பியோடி விட்டார். இதுகுறித்து பேராவூரணி போலீசார் தப்பியோடிய காளீஸ்வரன் வீசியெறிந்து விட்டு சென்ற செல்போன், சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி கடலாடி அருகே பதுங்கி இருந்த காளீஸ்வரனை கைது செய்து பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் .

Tags:    

Similar News