அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஒப்பாரி போராட்டம்

Update: 2023-11-07 07:04 GMT

ஒப்பாரி போராட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.2லட்சத்து 64ஆயிரம் கோடிகள் நிதி ஒதுக்க வேண்டும். பணியாளர்களை டிரோன் எனும் பறக்கும் கேமரா மூலம் கண்காணிப்பதை தவிர்க்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை சம்பளம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ஒப்பாரி போராட்டம் திண்டுக்கல் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் அருள்செல்வன் தலைமை வகித்தார். பொருளாளர் ரவீசந்திரன் முன்னிலை வகித்தார்.
Tags:    

Similar News