வளர்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆட்சியர் ஆய்வு செய்தார்.

Update: 2023-12-16 15:30 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பேரளி மற்றும் சித்தளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கற்பகம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பேரளி ஊராட்சியில், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.13.93 லட்சம் மதிப்பீட்டில் பேரளி ஊராட்சி மன்ற அலுவலகம் முதல் மாணிக்கம் வீடு வரை இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

பின்னர், சித்தளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெற்ற வருவதை பார்வையிட்டார். அப்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்களை மீட்டெடுக்க வேண்டும் என்றும், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.

பின்னர், பேரளி ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்களின்போது விண்ணப்பத்திருந்த இளம் வாக்காளர்களின் வீடுகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தபோது கடந்த இரண்டாண்டுகளில் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம். ரூ.163.78 கோடி மதிப்பீட்டில் 4,225 பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு

இதில், 92.76 கோடி மதிப்பீட்டில் 2,527 பணிகள் முடிவுற்றுள்ளது என தெரிவித்துள்ளார். இந்நிகழ்வின் போது, ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநர் அருளாளன். வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார், குன்னம் வட்டாட்சியர் கோவிந்தம்மாள், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News