விபத்தில் சிக்கிய முதியவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ஆட்சியர்

திருப்பத்தூரில் விபத்துகுள்ளன முதியவரை மீட்டு ஆட்டோவில் அரசு மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைத்தார்.;

Update: 2024-01-25 10:19 GMT

விபத்தில் சிக்கிய முதியவர்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காந்திநகர் பகுதியைச் சேர்ந்த நாச்சியப்பன் கவுண்டர் மகன் சண்முகம் (50) இவர் தன்னுடைய இருசக்கர வாகனம் பழுது காரணமாக புதுப்பேட்டை ரோடு செல்லும் சாலையில் உள்ள மெக்கானிக் கடைக்கு எடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் குனிச்சி பகுதியில் உள்ள நுகர்வோர் வாணிப கிடங்கில் இருந்து ரேஷன் பொருட்கள் ஏற்றிக்கொண்டு ஈச்சர் வண்டியில் ஓட்டுநர் செந்தில்குமார் குருமன்ஸ் காலனி பகுதிக்கு செல்ல புதுப்பேட்டை செல்லும் வழியாக வந்துள்ளார். இந்த நிலையில் நேர் எதிரே இருசக்கர வாகனமும் ஈச்சர் வண்டியை மோதிக்கொண்ட விபத்தில் சண்முகம் படுகாயம் அடைந்தார்.

Advertisement

இந்த நிலையில் அந்த வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலக முகாமிற்கு சென்ற மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் பாண்டியன் விபத்து ஏற்பட்டதை அறிந்து உடனடியாக அருகில் இருந்த ஆட்டோவை வரவழைத்து சண்முகத்தை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் விபத்தில் சிக்கிய முதியவரை மீட்டு மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் பொதுமக்களிடையே பாராட்டுதல்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News