எலக்ட்ரீசியன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலி
சங்கரன்கோவில் அருகே எலக்ட்ரீசியன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-06-09 11:49 GMT
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ஆனந்த்35, எலக்ட்ரீஷியன் ஆக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. மேலும் இவர் அதே பகுதியில் புது வீடு கட்டிடத்தில் உள்ளே எலக்ட்ரீசியன் வேலைக்காக சென்ற பொழுது வீட்டின் மேல் மாடியில் தனது பொருட்களுடன் வேலை பார்த்து கொண்டிருக்கும் பொழுது உயர் மின்னழுத்த உயர் மின்சாரம் தாக்கி எதிர்பாராத விதமாக சம்பவ இடத்திலேயே பலியானார்.
பொதுமக்கள் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடலை கைப்பற்றி உடல் ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.வேலை பார்க்க சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.