நிறைவடைந்தது ஜனநாயக திருவிழா

கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

Update: 2024-04-19 16:08 GMT

சீல் வைக்கும் அதிகாரிகள் 

நாட்டின் 18-வது மக்களவை தேர்தலை ஒட்டி இன்று முதல் கட்டமாக இந்தியாவில் 102 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தல் நடைபெற்றது.அதில் குறிப்பாக தமிழகத்தில் 39 தொகுதிகளும் பாண்டிச்சேரி ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.இன்று காலை 7 மணி முதல் மாலை 6 வரை தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள்,அரசியல் கட்சியினர்,

நடிகர்,நடிகை மற்றும் பொதுமக்கள் என ஜனநாயக கடமை தவறவிடாமல் வரிசையில் நின்று வாக்களித்தனர். அந்த வகையில் கோவை மக்களவைத் தொகுதியில் இன்று 2000"க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன் கோவை தடாகம் சாலையில் உள்ள ஜி.சி.டி கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் கோவை மக்களவைத் தொகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

வாக்கு பதிவு நிறைவடைந்தை ஒட்டி வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.தேர்தல் அதிகாரி முன்னிலை சீல் வைத்த பிறகு காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினருடன் கோவை தடாகம் சாலையில் உள்ள ஜி.சி.டி அரசு கல்லூரிக்கு எடுத்துச் செல்லும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News