The former minister said that AIADMK's victory is certain

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி நிச்சயமாக 2 லட்சத்துக்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.

Update: 2024-04-04 10:11 GMT

பிரச்சாரம்

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது திறந்த வெளி வாகனத்தில் நின்றபடி பொதுமக்களிடம் பேசிய அவர் "அமைதியாக இருந்த தமிழகம் இன்றைக்கு அமளிக்காடாக இருக்கிறது. தமிழகத்தை அமைதிக் காடாக வைத்திருந்த ஆட்சி அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சி அதனால் அதிமுகவிற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். தேர்தலில் வாக்குறுதிகளை அறிவித்து மக்களை ஏமாற்றிய கட்சி திமுக, தூத்துக்குடி ஸ்டார் தொகுதியெல்லாம் இல்லை அப்படி கள நிலவரமும் இல்லை.

கடந்த 4 நாட்களாக இங்குள்ள நிலைமையை பார்த்தால் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி நிச்சயமாக 2 லட்சத்துக்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்ற நிலை இருக்கிறது. எத்தனை அணிகள் அமைந்தாலும் களத்தில் போட்டி என்பது அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும் - திமுக தலைமைதான கூட்டணிக்கும்தான். தூத்துக்குடியில் திமுக வேட்பாளரை எதிர்த்து நிற்பதற்கு அதிமுக பயப்படுவதாக ஒரு தோற்றத்தை உருவாக்கினார்கள்.

அதிமுக பிறந்த குழந்தையாக இருக்கும்போதே தேர்தலை சந்தித்த ஒரு இயக்கம். தமிழகத்திலேயே வேட்பாளர் அறிமுக கூட்டத்தையும், பிரச்சாரக் கூட்டத்தையும் முதன்முதலாக தொடங்கியது தூத்துக்குடி பாராளுமன்றத்திலே தான். தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் 10 தாலுக்காவில் 5 தாலுகாக்களுக்கு மழை வெள்ள நிவாரணம் ரூ.1000 மட்டும் கொடுத்து ஓரவஞ்சனை செய்தார்கள் என்றார்.

Tags:    

Similar News