இந்து சமய அறநிலையத்துறை பணத்திற்காக மட்டுமே செயல்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை பணத்திற்காக மட்டுமே செயல்படுகிறது என பாஜக மாநில பேச்சாளர் ஸ்ரீகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்
By : King 24x7 Website
Update: 2023-12-13 17:47 GMT
திருச்சி வண்ணாரப்பேட்டையில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக மாநில பேச்சாளார் ஸ்ரீகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஊழல் செய்யும் கட்சிகளை வெளிப்படையாக எதிர்க்கிறார். மக்களுக்கு எடுத்துரைக்கிறார். ஊழலில் ஈடுபடும் கட்சி எதுவாக இருந்தாலும் தைரியமாக எதிர்க்கிறார்.காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தீரஜ் சாகு என்பவரின் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனைநடத்தியதில் சுமார் 350 கோடி ரூபாய்க்கும் மேலாக பணம் கைப்பற்றபட்டுள்ளது. ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் பக்தர்கள் தாக்கப்பட்டு உள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை காசுக்காக மட்டுமே செயல்படுகிறது. டோக்கன், உண்டியல் உள்ளிட்டவைகளுக்கு மட்டுமே கோவிலை அறநிலையத்துறை பயன்படுத்துகிறது. ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்கள் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது என கூறினார்.திருச்சி எம்பி திருநாவுக்கரசர் பொதுமக்களிடம் ஓட்டை பெற்றுக் கொண்டு வெற்றி பெற்று தொகுதி பக்கம் வராமல் இருக்கிறார் அவர் தொகுதியில் எந்த ஒரு செலவும் செய்யவில்லை அவரது நிதி என்னவாயிற்று என்பது இதுவரை தெரியவில்லை என கூறினார்.