சோகத்தூர் சாலையில் தேங்கிய மழை நீர் உடனடி நடவடிக்கை எடுத்த எம்எல்ஏ

சோகத்தூர் கிராமத்திற்கு செல்லக்கூடிய மேம்பாலத்தின் அடியில் தேங்கிய மழைநீர் துரித நடவடிக்கை எடுத்த தர்மபுரி எம்எல்ஏ.

Update: 2024-05-06 09:23 GMT

தண்ணீர் அகற்றும் பணியை ஆய்வு செய்த எம்எல்ஏ

தருமபுரி மாவட்டம் முழுவதிலும் நேற்று முன்தினம் இடி மின்னல் காற்றுடன் கூடிய மழை கொட்டியது, இந்த நிலையில் சோகத்தூர் கிராமத்திற்கு செல்லக்கூடிய மேம்பாலத்தின் அடியில் மழை நீர் குளம் தேங்கியதால், சோகத்தூர், மேட்டுத்தெரு, ஆட்டுக்காரன்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் தவிப்புக்குள்ளாகினர், வாகனங்களில் செல்வோர் தேங்கியிருக்கும் மழை நீரில் தடுமாறியபடி சென்றனர்,

இரவு நேரத்தில் தேங்கியிருக்கும் மழை நீரை கவனிக்காமல் சென்ற வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்தும் சென்றனர், இன்று இதனை தொடர்ந்து கிராம மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பந்தபட்ட சோகத்தூர் கிராமத்திற்கு நேற்று மாலை சென்ற தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கட்டேஸ்வரன்,

சம்மந்தபட்ட புதிய நான்கு வழிச்சாலை ஒப்பந்தம் எடுத்துள்ள அதிகாரிகளை அழைத்து உடனடியாக மழை நீர் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தததை தொடர்ந்து ஜே சி பி இயந்திர உதவியுடன், தேங்கிய மழை நீர் அருகேவுள்ள ஏரிக்கு செல்லும் வகையில் கால்வாய் அமைத்து தண்ணீரை வடித்ததால் மக்கள் நிம்மதியடைந்தனர்.

Tags:    

Similar News