அணைக்கட்டு அருகே புதிதாக கட்டப்பட்ட கால்வாய் 10நாட்களில் இடிந்து சேதம்

அணைக்கட்டு அருகே கால்வாய் கட்டி 10 நாட்களை ஆகிய உள்ள நிலையில் கால்வாய் இடிந்து விழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2024-07-02 14:36 GMT

சேதமடைந்த கால்வாய்

அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குருவராஜபாளையம் ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகள் மேற்கொள்வதற்காக ஊராட்சி மற்றும் ஒன்றிய பொது நிதியில் இருந்தும், 15-வது நிதிக்குழுவில் இருந்தும் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி 4-வது வார்டில் கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்காக 15-வது நிதிக்குழுவில் இருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டது. அதில் ஒரு பகுதியாக கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியின் ஒப்பந்தத்தை அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு பணியினை தொடங்கினார்.

கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி முடிந்து 10 நாட்களே ஆன நிலையில் கால்வாயின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதமானது.ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் இந்த பகுதியை ஆய்வு மேற்கொண்டு மீண்டும் தரமான முறையில் இடிந்து விழுந்த கழிவுநீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News