கள் இறக்கி விற்றவர் கைது
பெரம்பலூர் அருகே வ.அகரம் கிராமத்தில் கள் இறக்கி விற்பனை செய்தவரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
Update: 2024-01-14 06:24 GMT
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயம், கள், ஆகியவற்றை தயாரித்தல், ஊரல்போடுதல் விற்பனை செய்பவர்கள் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வ.அகரம் கிராம பகுதியில் கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி பெரம்பலூர் மாவட்டProhibition Enforcement DivisionProhibition Enforcement Divisionகூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேலுமணி வழிகாட்டுதலின்படி காவல் ஆய்வாளர் லதா மற்றும் அவரது குழுவினர் அக்கிராம பகுதியில் சிறப்பு தேடுதல் வேட்டை நடத்தியபோது வடக்கலூர், அண்ணாமலையார் தெருவை சேர்ந்த ராமதாஸ் மகன் மணி என்கிற தங்கமணி என்பவர் தனது வீட்டிற்கு பின்புறம் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக கள்ளு விற்பனை செய்து கொண்டிருந்தவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த 10 லிட்டர் அளவுள்ள கள்ளை பறிமுதல் செய்து, மணி என்கிற தங்கமணியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.