காவலர் குடியிருப்பு கட்ட ஒதுக்கிய இடம் எச்சரிக்கை பலகை

செங்கல்பட்டு மாவட்டம், நுாக்கம்பாளையம் பகுதியில் காவலர் குடியிருப்பு கட்ட ஒதுக்கிய இடத்தில் காவல்துறையினர் சார்ப்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.

Update: 2024-01-27 09:54 GMT
காவலர் குடியிருப்பு கட்ட ஒதுக்கிய இடம் எச்சரிக்கை பலகை

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் தாலுகா, பெரும்பாக்கம், நுாக்கம்பாளையம் சாலையில், சர்வே: 415/1எ3 என்ற எண்ணில் 6. 50 ஏக்கர் அரசு இடம் உள்ளது. இதில், பெரும்பாக்கத்தை சேர்ந்த சாரங்கன் என்பவர், பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில், இந்த இடத்தை கையகப்படுத்தி காவலர் குடியிருப்பு கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், காவல் துறைக்கு இடத்தை வழங்கியது. இனிமேல் பயிரிடக்கூடாது என சாரங்கன் தரப்புக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த இடத்தில் 200 கோடி ரூபாயில் 400 வீடுகளுடன் குடியிருப்பு கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், நேற்று, இடத்தை கையகப்படுத்த போலீசார் சென்றனர். அப்போது, சாரங்கன் தரப்பினர், நெல் பயிரிட்டுள்ளதாகவும், அறுவடை செய்யும் வரை கால அவகாசம் தாருங்கள் என்றும் போலீசாரிடம் முறையிட்டனர். இதற்கு, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் உங்கள் கோரிக்கையை முறையிடுங்கள். உத்தரவின்படி, இடத்தை மீட்டெடுக்க வந்திருக்கிறோம்' என, போலீசார் கூறினர். தொடர்ந்து, இடத்திற்கு செல்லும் பாதையை, இரும்பு தகரம் கொண்டு போலீசார் அடைத்தனர். பின், இடத்தின் சர்வே எண்ணை குறிப்பிட்டு, 'காவல் துறைக்கு சொந்தமான இடம்' என பலகை வைத்தனர். 

Tags:    

Similar News