அதிவேக பைக் பயணத்தால் வாலிபருக்கு நேர்ந்த துயரம்

Update: 2023-12-21 03:59 GMT

சாலை விபத்து 

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அணைக்கட்டு செல்லும் சாலையில் நேற்று இரவு வாலாஜாவில் இருந்து சாத்தம்பாக்கம் செல்லும் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது அப்போது அணைக்கட்டு ரோடு காந்தி தெருவை சேர்ந்த சாமு என்பவரின் மகன் பிரபு (29) மற்றும் அவரது நண்பர் இருவரும் பைக்கில் அதிவேகமாக அரசு பேருந்தை முந்தி சென்றபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் மீது மோதி பிரபு சம்பவ இடத்திலேயே நிலைதடுமாறி கீழே விழுந்து சுமார் 10 மீட்டர் அளவில் அவருடைய இடது கை முழுவதும் தேய்ந்து சென்றதால் கை முழுவதும் சேதமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.பிறகு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது இடது கை முழுவதும் விபத்தில் சேதமடைந்துள்ளதால் அவரை மேல் சிகிச்சைக்காக ரத்தினகிரி பகுதியில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாலாஜாபேட்டை போலீசார் விபத்துக்குள்ளான இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்ததோடு விபத்து காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News