நரசிங்க பெருமாள் கோவிலில் தெப்பல் உற்சவம்

நரசிங்க பெருமாள் கோவிலில் தெப்பல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2024-02-24 09:46 GMT
நரசிங்க பெருமாள் கோவிலில் தெப்பல் உற்சவம்

செங்கல்பட்டு மாவட்டம்,சிங்கபெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில், பாடலாத்ரி நரசிங்க பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவில் குளத்தில், ஆண்டுதோறும் மாசி மாதம் தெப்ப உற்சவம், ஐந்து நாட்கள் விமரிசையாக நடைபெறும்.

இந்தாண்டு தெப்ப உற்சவம் நடத்த உபயதாரர்கள் மற்றும் அதிகாரிகள் முடிவு செய்தனர். கடந்த நான்கு நாட்களாக பேரல்கள் மற்றும் சவுக்குக் கட்டைகள் கொண்டு தெப்பம் கட்டும் பணிகள் நடைபெற்றன.

தெப்ப உற்சவத்தின் முதல் நாளான நேற்று உற்சவர் பிரகலாத வரதர், முரளிகண்ணன் அலங்காரத்தில் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி, குளத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, இரவு 9: 00 மணிக்கு மேல் மாடவீதிகளில் மங்கள இசை முழங்க வீதியுலா விமரிசையாக நடைபெற்றது.

இதில், சிங்கபெருமாள் கோவிலைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.இதில், 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் ரப்பர் படகு மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று மாலை இரண்டாம் நாள் உற்சவம் நடைபெறும்.

Tags:    

Similar News