போதை பொருட்கள் வைத்திருந்தவர்கள் கைது

Update: 2023-11-04 03:44 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன் கிடைத்த இரகசிய தகவலின்படி, (வந்தவாசி பொறுப்பு) செய்யாறு உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சின்னராஜ் அவர்களின் மேற்பார்வையில், தெள்ளார் காவல் ஆய்வாளர் .P.ரேகாமதி மற்றும் தனிப்படை காவலர்கள் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் ராஜஸ்தான் மாநிலம், ஜலோரி மாவட்டம், திபவாஸ் கிராமத்தை சேர்ந்த ஹரிஷ்குமார் (22 ) த/பெ சோக்காராம் மற்றும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த (26) த/பெ ஒட்டாராம்,

வலரா கிராமம் உமேஷ்துகுமார் (26) என்பவர்கள் அவர்களது நான்கு சக்கர வாகனத்தில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா போன்ற போதை பொருட்களை வைத்திருந்தவர்களை கைது செய்து, தெள்ளார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து சுமார் 405 கிலோ கிராம் எடையுள்ள (மதிப்பு ரூ.3,50,000/-) ஹான்ஸ் மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள் & ஒரு நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News