நெடுங்கூரில் பணம் வைத்த சூதாடிய மூன்று பேர் கைது

நெடுங்கூரில் பணம் வைத்த சூதாடிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-05-11 16:03 GMT

காவல் நிலையம்

கரூர் மாவட்டம், க. பரமத்தி காவல் எல்லைக்குட்பட்ட நெடுங்கூர் பகுதியில், பணம் வைத்து சூதாடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் மே 10ஆம் தேதி இரவு 7:30 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, நெடுங்கூர் அருகே செயல்படும் அண்ணாமலை டிரேடர்ஸ் நிறுவனத்தின் பின்புறம் உள்ள முள்தோட்டத்தில் பணம் வைத்து சூது ஆடுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட, தென்னிலை, காருடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நடராஜன், விஸ்வநாதபுரி, நடுத்தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணி, வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கவியரசு ஆகிய மூன்று பேரையும் கைது செய்து அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும் ரூ.150-ம் பறிமுதல் செய்தனர்.

மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் மூன்று பேரையும் காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் க. பரமத்தி காவல்துறையினர்.

Tags:    

Similar News