பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது
மாரியம்மன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது. ரூ 250 பறிமுதல். காவல்துறை நடவடிக்கை.;
By : King 24x7 Angel
Update: 2024-02-19 12:22 GMT
பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது
பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, நடுப்பாளையம் அருகே உள்ள மாரியம்மன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகரனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், பிப்ரவரி 18-ம் தேதி மதியம் 12:00 மணி அளவில், நடுப்பாளையம் மாரியம்மன் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் பணம் வைத்து சூதாடிய நடுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த காமராஜ், அரவக்குறிச்சி தாலுக்கா கச்சினம்பட்டி பகுதியைச் சேர்ந்த அப்பாவு, சின்ன தாராபுரம் குடி தெருவை சேர்ந்த சௌந்தரராஜன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ₹250 முதல் செய்தனர். மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, பின்னர் காவல் நிலையப் பிணையில் விடுவித்தனர் சின்ன தாராபுரம் காவல் துறையினர்.