திருநெல்வேலி மாநகராட்சி மக்களை காக்க சிறப்பு ஏற்பாடு
திருநெல்வேலி மாநகராட்சியில் உப்பு சர்க்கரை நீர் கரைசல் வழங்கும் முகாம் தொடங்கப்பட உள்ளதாக ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
Update: 2024-04-22 12:26 GMT
திருநெல்வேலி மாவட்டத்தில் தற்பொழுது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.இந்த வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் நெல்லை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நாளை (ஏப்.23) உப்பு சர்க்கரை நீர் கரைசல் வழங்கும் முகாம் தொடங்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் இன்று (ஏப்.22) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.