அரசு மருத்துவமனையில் திருட்டை தடுக்க இருசக்கர வாகனங்களுக்கு டோக்கன்
Update: 2023-12-15 03:17 GMT
சேலம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போகும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. எனவே அதனை தடுக்கவும், திருட்டில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடிக்கும் வகையிலும் போலீசார் இருசக்கர வாகனங்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யும் முறையை நேற்று கொண்டு வந்தனர். கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஆஸ்பத்திரி காவலாளிகள் இருசக்கர வாகனத்தில் வருபவர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்கின்றனர். பின்னர் அவர்கள் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே செல்லும் போது அந்த டோக்கனை காவலாளியிடம் கொடுத்துவிட்டு தான் செல்ல வேண்டும். ஒரு நுழைவு வாயிலில் மட்டும் இந்த நடைமுறை கொண்டு வந்துள்ளதாகவும், பின்னர் படிப்படியாக மற்ற நுழைவு வாயில்களில் கொண்டு வரப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.