தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் சுற்றுலாத்துறை ஆணையர் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் உள்ள வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை சுற்றுலா மையத்தை, சுற்றுலாத்துறை ஆணையர் காகர்லா உஷா, மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தரங்கம்பாடி தாலுகாவில் விடாமல் கனமழை மற்றும் மிதமான மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இந்நிலையில், தரங்கம்பாடி கடற்கரையில் சுற்றுலா மையமான டேனிஷ் கோட்டையை, சுற்றுலாத்துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, ஆய்வு மேற்கொள்ள வந்தனர். காரில் இருந்து இறங்க முடியாத அளவிற்கு, கனமழை கொட்டினாலும், குடை பிடித்தபடி ஆய்வு செய்தனர். தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை, மற்றும் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் வளர்ச்சி நிலைகள் குறித்து சுற்றுலாத்துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். சுற்றுலாத்துறை மாவட்ட அலுவலர், கோட்டாட்சியர் ,காப்பாட்சியர், வட்டாட்சியர்,வருவாய்த் துறையினர் என பல அதிகாரிகள், உடன் இருந்தனர். கனமழை காரணமாக டேனிஷ் கோட்டைக்கு சுற்றுலா பயணிகள் வராததால், வெறிச்சோடி காணப்பட்டது.